இளம் மனைவி கணவனை விட்டு காதலனுடன் தப்பி ஓட்டம்!

கடந்த ஓகஸ்ட் மாதம் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை பிரான்ஸில் வாழும் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மணமுடித்துள்ளார்.

பின் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமையே குறித்த இளைஞனுடன் குடும்பம் நடத்திவிட்டு அதன் பின்னர் தான் காதலித்து வந்த காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரியவருகின்றது.

இது தொடர்பான முழு விபரங்களையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததுடன் தான் படுகின்ற வேதனையை இனி எவரும் அனுபவிக்க கூடாது என்றும் புரோக்கர்கள் மூலம் செய்யப்படுகின்ற திருமணத்தை நன்கு விசாரித்து உண்மை நிலையை அறிந்து திருமணம் செய்யுமாறும் 2009 முன் இருந்த பெண்கள் இப்போது இல்லை என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் அந்த அப்பாவி இளைஞன்.