மனித உடலிலேயே கல்லீரல் தான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகப்படியான மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறையிலான பாட்டி வைத்தியங்களை எடுத்துக்கொள்ளலாம்.
* மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமடையும்.
* முள்ளங்கியை நீரில் போட்டு சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.
* தினசரி ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்யும்.
* இஞ்சியை தினசரி உணவு சேர்த்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும்.
* கிரீன் டீயை தினசரி உணவிற்கு முன்பு குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்யும்.