ரஷ்யாவில் பெற்ற பிள்ளையை கணவர் கற்பழித்து கொலை செய்த சம்பவத்தில் மனமுடைந்த தாயார் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Rostov-on-Don பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அன்னா ஜுப்கோ என்பவரது கணவர் தமது 6 வயது பெண் குழந்தையை துஸ்பிரயோகம் செய்து,
அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தைக்கு மிகவும் பிடித்தமான பொம்மையை அதன் கழுத்தில் கட்டி தொங்க விட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடயவியல் மருத்துவ பரிசோதனையில் கொல்லப்பட்ட குழந்தை வெரோனிகா, அதன் தந்தையால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவத்தால் மனமுடைந்த அன்னா ஜுப்கோ அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே நிமோனியா பாதிப்புக்கு உள்ளான அவர், தமது குழந்தை கொல்லப்பட்ட 6 மாதங்களுக்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 28 வயதான தந்தை யரோஸ்லாவ் ஒலினிகோவ், பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக உள்ளார்.