மகன் வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டது ஏன்?

பிரித்தானியாவில் தன்னை விட 23 வயது குறைவான இளைஞரை பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமூகத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்.

பிரித்தானியாவின் Linconlshire கவுண்டியை சேர்ந்தவர் ஷரோன் ஓஸ்போர்ன் (50). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மார்க் (27) என்ற இளைஞரை பொது இடத்தில் சந்தித்தார்.

இதையடுத்து இருவரும் நட்பானார்கள். நட்பானது பின்னர் இருவருக்கும் காதலாக மாறியது.

தன்னை விட மார்க் 23 வயது இளையவர் என்பதையும் மீறி ஷரோன் அவரை உயிருக்கு உயிராக காதலித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தம்பதியின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களுக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் வயது குறைவானவரை மணந்ததால் ஷரோன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இது குறித்து ஷரோன் கூறுகையில், என் கணவருக்கு நான் குழந்தை பெற வேண்டும் என்பது ஆசை. ஆனால் அது முடியாது என அவருக்கு தெரிந்துவிட்டது.

இதனால் அவர் என்னை வெறுக்கவில்லை, என் மீதான அன்பை தான் அதிகப்படுத்தியுள்ளார்.

என் வயதில் பாதி தான் மார்க்குக்கு ஆகிறது, இதனால் பொது இடங்களில் நான் மார்க்கின் அம்மா என பலரும் நினைத்து விடுகிறார்கள்.

அவர்களிடம் நான் அவரின் மனைவி என புரியவைப்பது சவாலாக உள்ளது. எனக்கு முதல் திருமணம் நடந்து கணவரை பிரிந்துவிட்டேன்.

முதலில் என் 16 வயது மகளிடம் மார்க் குறித்து கூறவில்லை, பின்னர் தான் அவளிடம் இது குறித்து புரியவைத்தேன்.

தற்போது தந்தை ஸ்தானத்தில் என் மகளை மார்க் கவனித்து கொள்கிறார்.

என்னையும் என் கணவரை யார் விமர்சித்தாலும் எங்களுக்கு கவலையில்லை, காதலுக்கு வயது தடையில்லை என கூறியுள்ளார்.