வடமாகாணத்தின் அசமந்தப் போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமது துரித உயர்மட்ட செயற்பாட்டு முயற்சியின் பலனாக, மத்திய அரசினால் வடமாகாணத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான அனுமதிகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும் இந் நடைமுறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மீன்பிடித்துறைக்கான டிப்ளோமா பயின்ற கற்கை நெறியாளர்களும் இதன் மூலம் உள்வாங்கப்பட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.