மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் குறித்த Leaving Neverland என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் பேட்டியின் மூலம் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gavin Arvizo என்பவர் தனக்கு 13 வயது இருக்கையில் மைக்கேல் ஜாக்சன் உடல்ரீதியாக துன்புறுத்தியதாக Santa Barbara Sheriff’s அலுவலத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் பேசியது Sheriff’s அலுவலக அதிகாரிகளால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் 2003 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன். அவர் தவறான வீடியோக்களை என்னிடம் காண்பித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என என்னிடம் கூறினார்.
அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது வேண்டாமென்று மறுத்துவிட்டேன். அவரை அதனை ஏற்றுக்கொள்ளாமல் என்னை பலவந்தப்படுத்தனார். 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மைக்கேல் ஜாக்சன் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் கைது செய்யப்பட்டபோது, எங்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியல் நாங்கள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தோம்.
அப்போது, எங்களால் எதுவும் தெரிவிக்க இயலவில்லை, அந்த சம்பவத்தால் நான் அதிகம் பாதிக்கப்பட்டேன் என கூறியுள்ளார்.
இவர் மட்டுமன்றி இன்னும் அதிகமானோர் மைக்கேல் ஜாக்சனால் பாதிக்கப்பட்டது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர், ஆனால் மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.