தபால் ஓட்டுக்கு விலை பேசிய ஓபிஎஸ்!

இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் களைகட்டத் துவங்கிய நிலையில் தமிழகத்தின் துணை முதலமைச்சரான ஓபிஎஸ் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்கு விலை பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வரவிருக்கிறது.

இதற்கான திகதி அடுத்த ஒருசில நாட்களில் அறிவிக்க உள்ளனர். தமிழகத்தை பொறுத்தமட்டில் ஆளும் அதிமுக அரசு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 19,000 அரசு ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு 150 ரூபாய் வீதம் மொத்தம் 4,500 ரூபாய் மொத்தமாக வழங்க வேண்டும் எனவும்,

அவர்களின் தபால் ஓட்டுகள் அதிமுக சார்பில் அளிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் ஒருசில நிர்வாகிகளுடன் ரகசியமாக கலந்தாலோசிப்பது தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் பணம் வழங்க வேண்டும் எனவும்,

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் எனவும் அவர்கள் விவாதிப்பது பதிவாகியுள்ளது.

தற்போது குறித்த காணொளியானது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.