உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் அட்டன் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாரவில பகுதியில் இருந்து அட்டனுக்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பெண்ணொருவரை கொண்டு செல்ல வேண்டும் என முச்சக்கரவண்டி சாரதியிடம் கூறி,உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் பயண முடிவின் போது மரண வீட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்ததை அவதானித்த பின்னரே, தான் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை ஏற்றி வந்ததை முச்சக்கரவண்டி சாரதி அறிந்துள்ளார்.
பின்னர் அவர் இது தொடர்பில் அட்டன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகளும், அவரது பேரணுமே இவ்வாறு முச்சக்கரவண்டியில் சடலத்தை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அட்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.