‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனை எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன்  உள்ளூரில் எவருக்கும் ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இதனை கொடுத்த நோக்கம் என்ன எனவும் இதன்போது ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

சரியான கேள்விமனு கோரியே இந்த காப்புறுதி திட்டம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அது அமுலுக்கும் வந்துள்ளது. அதனால் இதனை இரத்துச் செய்வது கடினமென கல்வியமைச்சரும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

காப்புறுதியை இரத்துச் செய்வது தொடர்பான முக்கியமான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது இது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.