ராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தில் உள்ள கேஜ்கா பார் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர சிங்(வயது 23). இவருக்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் அமர்கோட் மாவட்டத்தில் சினோய் கிராமத்தில் வசிக்கும் சாஹன் கன்வருக்கும் திருமணம் செய்துவைப்பதாக என சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த திருமணம் நாளை பாகிஸ்தானில் நடப்பதாக இருந்துள்ளது.
திருமணத்திற்காக மகேந்திர சிங்கும் அவருடைய குடும்பத்தினரும் பாகிஸ்தான் செல்ல ரயில் டிக்கெட் எடுத்து இருந்தனர். ஆனால் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள மணமகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகன் தரப்பினர் தங்களது இயலாத சூழ்நிலையை தெரிவித்து திருமணத்தை சில வாரங்கள் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மணமகனின் கஷ்டத்தை புரிந்துக்கொன்று மணமகள் வீட்டாரும் திருமணத்தை தள்ளி ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த திருமணம் குறித்து மணமகன் மகேந்திர சிங் கூறியவை, எல்லையில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பியதும் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று மணமகளின் குடும்பத்திரிடம் கூறி இருக்கிறோம். பாகிஸ்தான் செல்வதற்காக 3 மாதங்களுக்கு முன்பே விசாவும் எடுத்துவிட்டேன். ஆனால் எல்லையில் இப்படி பதற்றமான நிலை ஏற்படும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. திருமணம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட இன்னும் சில வாரங்களில் எனது வருங்கால மனைவியை கைபிடிப்பேன் என்று கூறினார்.