ரஸ்யாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலக கிண்ணப்போட்டிகளை பயன்படுத்தி விபச்சாரத்திற்காக நைஜீரிய பெண்கள் கடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலககிண்ணப்போட்டிகள் வேலைவாய்ப்பை தேடிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் என நினைத்து ரஸ்யா சென்றதாக தெரிவித்துள்ள நைஜீரீயாவை சேர்ந்த 19 யுவதியொருவர் ஆனால் தான் விபச்சாரத்தில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உலககிண்ணப்போட்டிகளை பார்வையிடவரும் இரசிகர்களிற்கான அடையாள அட்டையை பயன்படுத்தி நான் ரஸ்யா சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
ரஸ்யா உலக கிண்ணத்தை பார்ப்பதற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நான் ரஸ்யாவில் உள்ள கடைகளில் வேலைபார்த்து நைஜீரியாவில் உள்ள எனது குடும்பத்தினரிற்கு பணம் அனுப்ப எண்ணினேன் என அவர் தெரிவித்துள்ளார்
எனினும் என்னை அழைத்துவந்தவர்கள் மொஸ்கோவின் புறநகர் பகுதியொன்றில் உள்ள தொடர்மாடியில் என்னை அடைத்து வைத்தனர் பின்னர் என்னையும் 11 நைஜீரிய பெண்களையும் பலவந்தப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர் என நைஜீரிய யுவதி தெரிவித்துள்ளார்
நைஜீரியாவை சேர்ந்த பெண்மணியொருவரே எங்களை கண்காணித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அந்த பெண்மணி எனது கடவுச்சீட்டை பறித்து வைத்ததுடன் நான் 50,000 டொலர்களை உழைத்தாலே என்னை விடுதலை செய்வேன் என அச்சுறுத்தினார் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்
ஒபுசன் என்ற நைஜீரிய யுவதி தனது துன்பத்தை தன்னிடம் வாடிக்கையாளராக வந்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நபர் இதனை அடிமைத்தனத்திற்கு எதிரான அமைப்பினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் நைஜீரிய யுவதியை மீட்டுள்ளனர்
இதேவேளை இவ்வாறு ரஸ்யாவிற்கு உலக கிண்ணப்போட்டிகளின் போது அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு யுவதிகளை ரொய்ட்டர் செய்தியாளர் சந்தித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் தாங்கள் வன்முறைகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்
அவர்கள் பல நாட்களிற்கு உங்களிற்கு உணவு தரமாட்டார்கள் அடித்து துன்புறுத்துவார்கள் என 21 வயது பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்
விபச்சாரத்தில் ஈடுபடமறுத்த நைஜீரிய பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் 2018 செப்டம்பரில் இடம்பெற்றது