இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!! பதற்றத்தில் மக்கள்.!

இந்த வருடத்தின் மே மாதமானது அதிகளவு வெப்பமாக இருக்கும் என்று ஆராய்ச்சி மையங்கள் தொடர்ந்து எச்சரிக்கை தெரிவித்து வருகிறது. அந்த வகையில்., இலங்கையில் நிலவும் அதிகளவு வெப்பத்தின் காரணமாக அங்குள்ள வடக்கு மற்றும் கிழக்கு பிரேதேசங்களில் அதிகளவு வெப்பமானது நிலவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணம்., கிளிநொச்சி., முல்லைத்தீவு., மன்னார்., திருகோணமலை., அனுராதபுரம்., அம்பாறை., புத்தளம்., பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சுமார் 32 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பமானது பதிவாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் காரணத்தால் பல ஆபத்துகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அங்குள்ள கம்பஹா., கொழும்பு., களுத்துறை., காலி., மாத்தறை., ஹம்பாந்தோட்டை., மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 27 டிகிரி செல்ஸியஸ் 32 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்கு அதிகளவில் நீரை அருந்துமாறும்., பகலில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அங்குள்ள வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.