கோவை செல்வபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி (வயது 17) ஒருவர் நேற்று வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடடினயாக அவரது தாயார் மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு, மற்றும் செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.