கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்., கல்லூரிகளில் பயிலும் மாணவிகளை தேர்வு செய்து காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாச படமெடுத்து மிரட்டி கற்பழித்ததும்., பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை காவல் துறையினர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. அவனிடம் இருந்த இரண்டு அலைபேசிகள் மற்றும் வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவனது அலைபேசியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளி பதிவுகள் இருந்துள்ளது. இது குறித்து காவல் துறையினரின் விசாரணையில் திருநாவுக்கரசு தெரிவித்தாவது., சேலத்தை சார்ந்த பெண் தோழி ஒருவரின் உதவிடுங் திருப்பதியில் இருந்ததாகவும்., பின்னர் அங்கிருந்து இங்கு வரும் சமயத்தில் கைதானதாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும்., கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த 2016 ம் வருவதில் எம்.பி.ஏ பயின்ற சமயத்தில் பல மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பழக்கத்தை வைத்து அவர்களிடம் உல்லாசமாக இருந்தேன். இதனை போன்று பல இளம்பெண்ணின் அலைபேசி எண்ணை அறிந்து., அவர்களை காதல் வலையில் விழ வைத்து., அவர்களை என் வசபடுத்தினேன்.
அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் காணொளி காட்சிகளை பதிவு செய்த எனது நண்பர்கள்., அவர்களுடன் கட்டாய உல்லாசத்தில் ஈடுபட்டார். கடைசியாக இளம்பெண் ஒருவரை காதல் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்த சமயத்தில்., அவர் வழங்கிய பாலியல் புகாரில் மாட்டிக்கொண்டோம். காவல் துறையினர் தேடுதல் வேட்டையை அடுத்து சேலத்திற்கு சென்று., அங்கிருந்த தோழியின் உதவியுடன் திருப்பதியில் தங்கியிருதேன். அங்கிருந்து சேலத்திற்கு வந்து., காரில் கோவைக்கு வரும் வழியில் காவல் துறையினர் எண்ணை பிடித்தனர் என்று தனது வாக்குமூலத்தை கூறியுள்ளான்.
கைதான திருநாவுக்கரசனை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து., மத்திய சிறையில் அடைத்தனர். மேலும்., திருநாவுக்கரசனின் நண்பர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஷயம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயராமன் அவர் கூறிய தகவலாவது.,
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து அத்துமீறியது தெரியவந்துள்ளது. மேலும்., அவர்களிடம் மிரட்டி நகை மற்றும் பணங்களை பிரித்துள்ளனர். இவர்கள் நால்வரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருபத்தக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
மேலும்., திருநாவுக்கரசின் சொந்த ஊரான சினப்பம்பாளையத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குடும்பத்தாருடன் வீட்டை காலி செய்து விட்டு மாக்கினாம்பட்டிக்கு வந்தடைந்தனர். அந்த வீடு காலியாக இருந்ததை அடுத்து., அதனை உல்லாச தேவைக்கு உபயோகப்படுத்தி வந்துள்ளான் என்பது தெரியவந்தது.