நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசித்து வந்தவர் சைபி மேத்யூ, 35 நிறைந்த இவர், இயற்கையைப் பாதுகாக்க பிளாஸ்டிக் ஒழிப்பு, விவசாயம் செய்தல் மற்றும் வீடுதோறும் மரக்கன்று நடுதல் ஆகியவற்றின் பலன்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும் அதற்காக அவர் தனது இருசக்கர வாகனத்தில் நின்றவாறு ஓட்டி, வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் பிப்ரவரி, 3 ம் தேதி ஊட்டியில் தனது பிரசாரத்தைத் துவக்கிய பைக்கிலேயே பிரச்சாரம் மேற்கொண்டு சமீபத்தில் காஞ்சிபுரம் வந்தார்,அதனை தொடர்ந்து அவர் நேற்று, திருவள்ளூர் வந்து சேர்ந்தார். அங்கு அவரை ஞானவித்யாலயா பள்ளியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், இயற்கை விவசாயம் மற்றும் மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். மேலும் மேலும் இயற்கை அழிவு குறித்து உடல்நலம் குறித்து ம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்,இருசக்கர வாகனத்தில் நின்றபடி ஓட்டிச் சென்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். இவருக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.