மனமுடைந்து விபரீத முடிவெடுத்த மூதாட்டிக்கு ஹீரோவாக மறுவாழ்வு கொடுத்த இன்ஸ்பெக்டர்.!

சென்னை பெரவள்ளூர் லோகோ சாலையில் வசித்து வருபவர் கஜலட்சுமி .70 வயது நிறைந்த இவரது கணவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனக்கு குழந்தைகளும் இல்லாத நிலையில் கஜலட்சுமி வீட்டு வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் சிலநாட்களாக வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் வருமானம் ஏதும் இல்லாமல் சாப்பிடவும், தனக்கு மருந்து வாங்கிக்கொள்ளவும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கென யாரும் இல்லையே என மனவேதனை அடைந்த கஜலட்சுமி லோகோ ரெயில் நிலையம் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உடனே இதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றினர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மூதாட்டி கஜலட்சுமிக்கு ஆறுதல் கூறினர். பின்னர் அவருக்கு அவருக்கு சாப்பிட உணவு, மற்றும் உடை வாங்கி கொடுத்துள்ளார்

அதனை தொடர்ந்து கஜலட்சுமியை இனி தனியாக இருக்கவேண்டாம் என கூறி அயனாவரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.