சோகத்தில் சினிமாத்துறை! பிரபல நடிகர் திடீர் மரணம்!

தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு. திருச்சியை சேர்ந்த இவர் 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார். 500 க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து வந்தார்.

இவர் நடிக்கும்போது டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் கோபாலரத்தினம் என்ற இவரின் பெயரை டைபிஸ்ட் கோபு என மாறியது. இவர் உயர்ந்த மனிதன், எங்க மாமா, காசேதான் கடவுளடா, பரீட்சைக்கும் நேரமாச்சு, மைக்கேல் மதன காமராஜன் என முக்கிய படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நாகேஷின் நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். ஆனாலும் பின்னாளில் முதுமையின் காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.

82 வயதான இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். உடல்நலக்குறைவால் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் புதன் கிழமை நேற்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.