நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அனைவருக்கும் இலவச இணையம் என்ற வாக்குறுதிக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக, பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாடு முழுவதிலுமுள்ள பிரதான இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவசல வை-வை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இலவசமாக நாட்டு மக்கள் இணைய சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வசதியை பெறும் எந்தவொரு நபரும் மாதாந்தம் 100 MBஅளவு இலவச வைபையை பெற்றுகொள்ள முடியும். எந்த நேரத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலவச வைபை வசதியினை பெற்றுக் கொள்ள முடியும்.
2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் 1176 பகுதிகளில் 455741 பேர் இலவச இணைய வசதியினை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் இந்த வை-பை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி முதல் 455741 GB இலவச வை-பை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் அதிகளவான இளைஞர், யுவதிகள் ஸ்மார்ட் கைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். இலவச இணைய வசதி மூலம் பலர் நன்மை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .