தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

ஆபரணம் மற்றும் முதலீடு காரணங்களுக்காக பலரும் தங்கம் வாங்குகின்றனர். இன்று வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையை காட்டிலும் குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கம், கிராம் ஒன்றிற்கு 3,057.00 ரூபாயாக விற்கப்படுகிறது. 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,456.00 ரூபாய் ஆகும்.

சொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,204.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,632.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இருபத்தி மூன்று ருபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் பெரிய மாற்றமேதுமில்லை. வெள்ளி விலை இன்று ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 41,000.00 ரூபாய்க்கே விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்களில் ஏற்ற இறங்கங்கள் ஏற்படுகின்றன. பலரும் முதலீடுகளுக்காக தங்கம் வாங்குவதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு செல்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி உற்பத்தி அதிகரித்தால் இந்த இரண்டின் விலைகள் சற்று குறையும் சூழல் ஏற்படும்.