கூண்டுக்கிளி என்ற படத்தில் மட்டும் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். எனவே, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமாக பார்க்கப்படுகிறது.
இந்த கூண்டுக்கிளி படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் தான் குசலகுமாரி (83) எனும் நடிகை. மேலும், இவர் போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா, மன்மத லீலை, பராசக்தி மற்றும் கொஞ்சும் சலங்கை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், 250 படங்களுக்கு மேல் அதில் நடன கதாபாத்திரத்தில் நடனமாடி இருக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர். சுந்தரம் எனப்படும் தனது தம்பியின் குடும்பத்தோடு அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.