பெரிய நெல்லிக்காய் – 1தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,0,
உப்பு – தேவையான அளவு.
காய்ந்த மிளகாய் – 4,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை எடுத்து கழுவி அதன் கொட்டையை நீக்கி, பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர், துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காயை மிக்சியில் போட்டு அதனுடன், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்கவும்.
சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடி!