சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ஜாம்செட்பூரில் பழங்குடியினத்தை சார்ந்த மாணவி ஒருவர் 10 வகுப்பு பயின்று வருகிறார். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது. பள்ளியில் தேர்வு சமயங்களில் அதிரடி படையினர் வந்து சோதனைக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில்., மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் அதிரடி படையினர் வந்துள்ளனர். அங்கிருந்த மாணவியிடம் பிட் பேப்பர்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
மாணவியிடம் சோதனை மேற்கொண்ட அவர்கள் ஆடையை களைத்து சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் பிட் ஏதும் இல்லாததை அறிந்து மாணவியை தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.
தேர்வு முடிந்ததும் இல்லத்திற்கும் விரைந்த மாணவி “வாழவே பிடிக்கவில்லை., இறந்து விடலாம் என்று தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தேர்வை சரிவர எழுதாததன் காரணமாக இவ்வாறு கூறுவதாக எண்ணி அமைதியாக இறந்துவிட்டனர்.
இதனையடுத்து மறுநாள் காலையில் மாணவி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து மாணவியை தேடி அழைத்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கிருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரின் உடலை பார்த்து கதறியழுதனர்.
இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.