பெரும்பாலும் கோவில்கள் ஆன்மிகத்தையும், கட்டிடக்கலையையும் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு சில கோவில்கள் வித்தியாசமான அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும். பொதுவாகவே கோவில்களுக்கு பக்தர்கள் விரும்பி செல்வார்கள். அதே கோவில் பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினால் எப்படி இருக்கும்? என்பதை வாங்க பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிரடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.
என்னதான் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் வறட்சியாக காணப்பட்டாலும், பாலைவனத்திற்கு அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கு செல்லும் பாதை கான்கிரீட் தளமிட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் வழிநெடுகிலும் பச்சை பசேலென்று செடி மரங்கள் உள்ளன.
மாலை நேரங்களில் வழிபடும் பக்தர்கள் இரவு ஆவதற்குள் அதாவது 6 மணிக்குள் இடத்தை காலி செய்துவிடுகின்றனர். தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு யாரும் தங்குவதில்லை.
இங்கு இரவு நேரங்களில் தங்குபவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த அதிர்ச்சியான அதிசயம் நடக்கிறதாம். கோவிலில் தங்கக்கூடாது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீறி தங்கினால் அவ்வளவுதான். அவர்கள் சிலையாக மாறிவிடுகின்றனர்.
உள்ள ர் வாசிகள், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்ததாகவும், அவருக்கு இந்த மக்களை பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டதாகவும் கூறினார். அந்த முனிவர் இந்த கோவிலில்தான் தற்போதும் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர். பஞ்சபாண்டவர்களின் எலும்புகள் இந்த குகையில் இருக்கிறதாம்.
இங்குள்ள சுவர்கள், தூண்கள் என அனைத்திலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றமளிக்கிறது.
இந்த கோவில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. பழமைக்கும், கட்டிடத்திற்கும் பெயர்பெற்ற இந்த கோவில் தற்போது பயத்திற்கும், அமானுஷ்யத்திற்கும் புகழ் பெற்று விளங்குகிறது.