மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த 5 வயது குழந்தை!

பிரித்தானியாவை சேர்ந்தவர் ஸ்டீவன் மூர். இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகள் எல்ஸ்பெத் மூர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் எல்ஸ்பெத்துக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே பதறி போன ஸ்டீவன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது சாதாரண வயிற்று வலி, வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டிற்கு அழைத்து வந்த எல்ஸ்பெத்துக்கு மீண்டும் வயிற்று வலி தொடர்ந்துள்ளது. மேலும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமிக்கு காய்ச்சல் உள்ளது சரியாகி விடும் என கூறி அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நலம் மிகவும் மோசமாகியுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்த எலிசபெத் தனது தந்தையை அருகே அழைத்து ஐ லவ் யூ அப்பா எனக்கூறி மயங்கியுள்ளார்.

இதனால் பதறிய எலிசபெத்தின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்தே சிறுமிக்கு குடல்வால் அழற்சி நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் அலட்சியத்தாலே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மருத்துவமனையின் அலட்சியத்தால் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.