ஆடும் பொழுது கை பட்டதால் ஒரு ஊரே போர்க்களமானது!

திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரம் கோவிலில் தகராறு செய்த கூலிப்படையினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரம் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவில் பிப்ரவரி மாதம்பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவின் சலங்கையாட்டத்தில் ஆடும் பொழுது கை பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் 9 பேர் கொண்ட கூலிப்படையினரை வைத்து அந்த பகுதியிலுள்ள தங்கராஜ் மற்றும்அவரது உறவினரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான தங்கராஜ் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அந்தப் பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் கூறுகையில், இப்பொழுது 3 பேரை கைதுசெய்துள்ளோம். மேலும் தகராறில் ஈடுபட்ட மீதமுள்ள நபர்களை விரைவில் கைது செய்வோம்.விசாரணைக்குபின்னர் வழக்குகள் திருத்தியமைக்கப்படும் என கூறினார்.