இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அவர்களின் தரத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்கான தர நிலையை அளிக்கும். இது ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
அந்த வகையில் வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
ஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்கள்:
- கேப்டன் கோலி,
- ரோகித் சர்மா,
- பும்ரா
சம்பளம்: ஆண்டுக்கு 7 கோடி ரூபாய்
ஏ பிரிவில் உள்ள வீரர்கள்:
- ஷிகர் தவான்,
- புவனேஷ்வர் குமார்,
- அஸ்வின்,
- புஜாரா,
- தோனி,
- குல்தீப் யாதவ்,
- முகம்மது சமி,
- இஷாந்த் சர்மா
- ரிஷப் பாண்ட்
சம்பளம்: ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்
பி பிரிவில் உள்ள வீரர்கள்:
- கே.எல்.ராகுல்,
- ஹர்திக் பாண்ட்யா
- உமேஷ் யாதவ்,
- யுஸ்வேந்திர சகால்
சம்பளம்: ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்
சி பிரிவில் உள்ள வீரர்கள்:
- கேதர் ஜாதவ்,
- தினேஷ் கார்த்திக்,
- அம்பத்தி ராயுடு,
- மனிஷ் பாண்டே,
- ஹனுமா விஹாரி,
- கலீல் அகமது,
- ரிதிமான் சஹா
சம்பளம்: ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்
இதில் ஷிகர் தவான், புவனேஷ் குமார் ஆகியோர் ஏ பிளஸ் கிரேடில் இடம் பெறவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.