கார் அரசுப்பேருந்து மீது மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி!

தெலங்கானா மாநிலம் கொண்டமாலப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொலிரோ கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கொண்டமாலப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொலிரோ கார் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி மரணமடைந்தனர். பேருந்தின் முன் இருக்கைகளில் உட்கார்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளில் 15 பேர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தில் இருந்து தேவார கொண்ட சென்று கொண்டிருந்த பொலிரோ கார் ஹைதராபாத்,
நாகார்ஜுன சாகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கொண்ட மாலப்பள்ளி அருகே காரின் முன்பக்க டயர் மூன்று திடீரென்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கி பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி மரணமடைந்தனர். கார் மோதிய வேகத்தில் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது.

இதனால் பேருந்தின் முன் இருக்கைகளில் உட்கார்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளில் 15 பேர் காயமடைந்தனர். தொடாந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேவரகொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக தேவரகொண்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர. மேலும் விபத்தில் மரணமடைந்த உடல்களை மீட்டு தேவரகொண்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.