இந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.டோனி, ராஞ்சியில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் சக வீரர்களுக்கு விருந்து கொடுத்தார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இது விக்கெட் கீப்பர் டோனியின் சொந்த ஊராகும். மேலும் இங்கு அவருக்கு சொந்தமாக ரெஸ்டாரண்ட் உள்ளது.
இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க ராஞ்சிக்கு சென்றுள்ளனர். அங்கு தனது ரெஸ்டாரண்டிற்கு சக அணி வீரர்களை வரவேற்ற டோனி, அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.
Thank you for last night @msdhoni bhai and @SaakshiSRawat bhabhi ☺?? pic.twitter.com/80BOroVvze
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 7, 2019
இந்த விருந்தில் கலந்துகொண்ட அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், விருந்து தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Great night with the boys at mahi bhais place last night. Good food, fun chats all around and great energy. Perfect team evening ????. @msdhoni @imkuldeep18 @RishabPant777 @yuzi_chahal pic.twitter.com/6Xfc4rK7Xl
— Virat Kohli (@imVkohli) March 7, 2019