வெளிநாட்டிலிருந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க தமிழகம் வந்த இளைஞர், திருமணமே வேண்டாம் என கூறி மீண்டும் வெளிநாட்டுக்கே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்ற நபருக்கும், மதுரையை சேர்ந்த தமிழ்மொழி வர்மேல் என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பணிபுரியும் ராம்கி பெண்ணின் புகைப்படத்தை மட்டுமே பார்த்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக விடுமுறை எடுத்த அவர் தமிழகம் வந்தார்.
பின்னர் தனது வருங்கால மனைவியான தமிழ்மொழியை காண ஆசையாக அவர் வீட்டுக்கு சென்றார்.
சிறிது நேரம் இருவரும் உரையாடிய நிலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம் என தமிழ்மொழியிடம் ராம்கி கூறினார்.
ஆனால் இதற்கு தமிழ்மொழி மறுப்பு தெரிவித்ததோடு, தனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது என கூறியதாக தெரிகிறது.
ஆனால் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்ட ராம்கிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சின்ன விடயம் கூட பெண்ணுடன் ஒத்து வரவில்லையே என நினைத்த ராம்கி சில நாட்களில் நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்திவிட்டார்.
மேலும் உடனடியாக சிங்கப்பூருக்கு திரும்பினார் ராம்கி. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.