சென்னை சின்மயா நகரில் வசித்து வருபவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கஸாலி. இவருக்கு 12 வயதில் ஹரிஷ்அகமது என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹரிஷ் அகமதுவிற்கு கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல சோதனைகள் செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் வயிற்றில் எந்த பிரச்சினையும் இல்லை என கூறி அனுப்பியுள்ளனர்.
ஆனாலும் அகமதுவின் வயிற்றுவலி குறையாத நிலையில் ஒருநாள் அதிகமாக தண்ணீர் குடித்ததால் வாந்தி எடுத்துள்ளார் அப்போது அவரது வயிற்றில் இருந்த கேரிபேக் துண்டுகள் வெளியே வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செய்துள்ளனர். பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறி அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், அகமது கடந்த நான்கு மாதங்களாக தூங்க கூட இல்லாமல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். நாங்களும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பல டெஸ்ட் எடுத்தோம். ஆனால் பலனில்லை என கூறியுள்ளனர். மேலும் அல்சருக்கான மாத்திரைகளும் கொடுத்து வந்தோம்.
மேலும் அவன் பள்ளி கேன்டீனில் சம்சா விரும்பி சாப்பிடுவான் அவ்வாறு சாப்பிடும் போது அதன் உள்ளே இருக்கும் மசாலா பொருட்களோடு பிளாஸ்டிக் வயிற்றுக்குள் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அதுகுறித்து பள்ளியில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.