முந்தைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான உறவு என்பது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவை போல மிகவும் புனிதமாக இருந்தது. மேலும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை குழந்தைகளாக பாவித்து அவர்களது எதிர்காலத்திற்காக அவர்களது தவறுகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவர். மேலும் மாணவர்களும் ஒருவித மரியாதை கலந்த அச்சத்துடன் ஆசிரியர்கள் சொல் கேட்டு நடந்து வந்தனர்.
ஆனால் காலங்கள் மாற மாற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே உள்ள உறவின் புனிதமும் மாறி வருகிறது. மேலும் இன்றைய சமுதாயத்தில் ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறான முறைகளில் நடந்து வருகின்றனர். சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து பல தவறான செய்திகள் வந்தாலும் ஒரு சில பள்ளிகளில் தற்போதும் ஆசிரியர்கள் மாணவர்களை தங்களது பிள்ளைகளாக பாவித்து அவர்களின் வளர்ச்சிக்காக ஊக்குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் நடனமாட அவனை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியைகள் சேர்ந்து உடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே பள்ளி இறுதி நாளன்று நடனப் போட்டி நடந்துள்ளது அப்போது மாணவ மனைகள் அனைவரும் சூழ்ந்துள்ள நிலையில் மாணவர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா நடித்து வெளியான பாடல் ஒன்றிற்கு மிகவும் நேர்த்தியாக நடனமாடியுள்ளார். இந்நிலையில் அவரது நடனத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்த ஆசிரியைகள் அந்த மாணவனை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவருடன் இணைந்து நடனமாடி அங்கிருந்த மாணவ மாணவிகளை மகிழ்வித்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.