புல்வமா தாக்குதலில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்றைய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இராணுவ தொப்பியுடன் ஆடுகளம் புகுந்து விளையாடி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14 ஆம் திகதி இராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே அவுஸ்திரேலியாகவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று இராணுவ தொப்பியுடன் ஆடுகளம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.