தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி – நாளை கிடைக்கும் விமோசனம்..!

தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாமல், வெயில் சுட்டெரித்தது. தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்டது எனவே மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மழை, பனி என்று தமிழகம் குளுமையாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் வட்டி வதக்கி வருகிறது.

கோடை வெயில் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது 40 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக தமிழகத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெப்பம் நாளை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் அனல் காற்று வீசியது.

நாளை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.