சுரேஷ் குமார் (வயது 45) என்பவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்,காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார் . சுரேஷ் குமார் அலுவலகம் கொங்கநாயக்கன் பாளையத்தில் உள்ளது.
நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி பிரகதீஸ்வரன் (வயது 29) இவர் தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்து தர வேண்டும் என விண்ணப்பம் அளிக்க கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமாராய் பார்க்க அவர் அலுவலகதிற்கு சென்றார் .
பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் ரூ.3000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் ரூ.1000 மட்டும் பிரகதீஸ்வரன் தருவதாக கூறி உள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக ரூ.3000 கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்து தரப்படும் என கூறி உள்ளார் .
விவசாயி பிரகதீஸ்வரன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் இது குறித்து புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2000 நோட்டு ஒன்றும், ரூ500 நோட்டுக்கள் இரண்டையும் பிரகதீஸ்வரனிடம் கொடுத்து அனுப்பினர்.
கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரகதீஸ்வரன் கொடுக்கும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்ததா ரூ .3௦௦௦ நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமாராய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு நூதன முறையை பயன்படுத்தி லஞ்சம் வாங்கியவரை பிடித்துள்ளதால், அந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கும், பிரகதீஸ்வரன் என்ற இளைஞருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.