இங்கிலாந்து நாட்டில் இருக்கும் இலண்டனை சார்ந்த 5 வயதுடைய சிறுவனின் பெயர் ஆஸ்கார். இந்த சிறுவன் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு., அங்குள்ள மருத்துவமனையில் உயிருக்காக போராடி கொண்டு வருகிறார்.
இவரின் உடல் நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுவனுக்கு வரும் மூன்று மாத காலத்திற்குள் ஸ்டெம் செல் சிகிச்சை தர வேண்டும் என்ற செய்தியை விளம்பரத்தின் மூலமாக தெரிவித்தது.
சிறுவன் பயின்று வந்த பள்ளியின் நிர்வாகமும்., தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சிறுவனின் நிலையை மக்களுக்கு எடுத்துரைத்து., சிகிச்சை குறித்த தகவலை தெரிவித்து உதவிக்கு கோரியது.
இந்த செய்தியானது நாடு முழுவதும் தீயாய் பரவவே., இந்த செய்தியை அறிந்த மக்கள் சிறுவனுக்கு சுமார் 11 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.770291.50) அனுப்பி வைத்தனர். மேலும்., சிறுவனுக்கு தேவையான ஸ்டெம் செல் சிகிச்சைக்கு உதவுவதற்காக சுமார் 5800 நபர்கள் இணையம் மூலமாக பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைப்பு விடுத்த நிர்வாகமானது வந்தவர்களை பார்த்து அதிர்ந்து போனார்கள்., சுமார் 5000 மக்கள் மருத்துவமனையின் வாயிலில் குவிந்தத்தை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அந்த சமயத்தில் திடீரென மழை பெய்ய துவங்கியதும்., சற்றும் எதிர்பாராத வேலையில் அங்கிருந்து ஒருவரும் கலைந்து செல்லாமல் மருத்துவமனையின் வாயிலில் வரிசையாக காத்து கொண்டு இருந்தனர். அங்கு இருந்த மருத்துவர்கள் அவர்களின் மாதிரியை சேகரித்தனர்.
இந்த சிறுவனுக்கு உதவி செய்வதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்., மக்களின் உதவிக்கும் பிரார்த்தனைக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மருத்துவமனைக்கு வந்த அனைவரின் ஸ்டெம் செல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு., யாருடைய ஸ்டெம் செல் சிறுவனின் உடலுக்கு சரியாக இருக்கும் என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கவிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும்., சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்காக கொட்டும் மழையிலும் 5000 மக்கள் வரிசையில் காத்திருந்த சம்பவமானது உலகம் முழுவதும் தெரியவந்து பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.