7 முறை கருவுற்றும் கரு கலைந்த சோகம்.!

கனடா நாட்டை சார்ந்தவர் நிகோலஸ் லார்பி (வயது 34). அதே பகுதியை சார்ந்த பெண்மணி சாரா. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் இருவரும் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நிலையில்., பிற தம்பதியினரை போலவே., இவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

ஆனால் இவர்களுக்கு ஒரு ஒரு முறை கருவுற்று இருந்த சமயத்திலும் கரு கழிந்துள்ளது. மேலும்., சுமார் 7 முறை கருவுற்று இருந்த சமயத்திலும் கரு வயிற்றில் தாங்காமல் கலைந்துள்ளது.

இது குறித்து நிகோலஸ் மற்றும் சாராவின் குடும்பத்தினர் அடிக்கடி அவர்களிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும்., சிலர் அவர்களை கிண்டலடித்து வந்துள்ளனர். இதனால் கடும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து., விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அந்த சமயத்தில் இல்லத்திற்கு வந்த நிக்கோலஸின் தந்தை இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனையில் இவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்., இதனை கண்டு அவர் கதறியழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.