தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் சிம்பு. ஆடல்,பாடல், நடிப்பு என பன்முகத் திறமை கொண்ட இவருக்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்த சிம்பு மீண்டும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் சுந்தர்சி இயக்கத்தில் வந்தா ராஜாதான் வருவேன் என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் நடிகர் ஆர்யாவிற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கன்னடத்தில் ஸ்ரீ முரளி மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மப்டி. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் அதில் ஆர்யாவும் சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் இப்படத்தில் ஆர்யாவுக்கு நடிகர் சிம்பு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .இதில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.