-
மேஷம்
மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்
-
ரிஷபம்
ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள் வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் இழந்தசெல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். குடும்பத் தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல் படுங்கள். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப் படாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்க வும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைகழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்
-
கன்னி
கன்னி: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறை வேறும் நாள்.
-
தனுசு
தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்
கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள். -
மகரம்
மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்-. அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அழகு, இளமைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்
-
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையி லேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்பு களை ஒப்படைக்காதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.