சாதனையை முறியடித்து கோலி அபாரம்! ரோஹித்தை முந்திய தோனி!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அதிக ரன்களை குவித்தது. உஸ்மான் கவாஜா கேப்டன் பிஞ்ச் அதிரடியாக விளையாட இந்திய பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி தடுமாறினார்கள். குல்தீப் யாதவ்வின் சுழலில் ஆரோன் பின்ச் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து 8 ரன்களில் சதத்தை நழுவ விட்டார்.

அதன் பின்னர் உஸ்மான் கவாஜா சதம் அடிக்க அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 47 ஸ்டைணிஸ் 31 அலக்ஸ் கரே 21 என அடிக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது.

பின்னர் 314 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் 1 ரன்னிலும் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். அந்த அதிர்ச்சியை ரசிகர்கள் தாங்குவதற்குள் அடுத்ததாக வந்த அம்பத்தி ராயுடு 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அடுத்ததாக விக்கெட் கீப்பர் மண்ணின் மைந்தர் தோனி கேப்டன் விராட் கோலியுடன் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆட முயற்சித்துக் கொண்டிருக்கும்போது 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தனி ஒருவனாக விராட் கோலி கேப்டன் விராட் கோலி போராடிக் கொண்டிருக்க மறுமுனையில் ஜாதவ் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வந்தார். சற்றுமுன் அவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 32 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியின் இடையே கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை அடித்து வேகமாக 4000 ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் 77 போட்டிகளில் இந்த சாதனை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது விராட் கோலி 63 போட்டிகளில் இந்த சாதனையை செய்து முடித்துள்ளார். மேலும் தற்போது தனது ஐம்பதாவது அரை சதத்தையும் இந்த போட்டியில் அடித்துள்ளார். அதேபோல இந்திய சார்பில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் ரோஹித் சர்மாவை முந்தி டோனி 217 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 216 சிக்சருடன் ரோகித் சர்மா இரண்டாமிடத்தில் இருக்கிறார்.