ஆளுநர் திடீர் ராஜினாமா.! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!!

மிசோரம் மாநில ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம், தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பாஜக முன்னாள் தலைவர் கும்மணம் ராஜசேகரன், கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றார், அவர் பதவியேற்று 10 மாதங்களே ஆன நிலையில் இன்று பதவியை ராஜினாமா செய்வதாக, ராஜினாமா கடிதத்தை இந்திய குடியசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் கொடுத்துள்ளார்.

கேரளா மாநிலதின் பாஜக முன்னாள் தலைவராக இருந்தவர் கும்பகோணம் ராஜசேகரன். இவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியது.

மேலும், திருவனந்தபுரம் தொகுதியில் ராஜசேகரன் அவர்களை வேட்பாளராக நிறுத்துவதற்கு, பாஜக முழு ஆதரவை தரும் என்று அம்மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்திருந்தார். மேலும், இந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. இதனால், அந்த தொகுதியில் போட்டியிடும் மற்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் மிசோரம் மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் ராஜசேகரன் அவர்கள் வழங்கியுள்ளார். இவர் ராஜினாமா செய்ததை அடுத்து மிசோரம் மாநிலத்துக்கு புதிய ஆளுநரை நியமிக்கும் வரை, அசாம் மாநிலத்தின் ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு, மிசோரம் மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் தலைவரும், மாநில ஆளுநராக இருந்த ராஜசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவது பாஜக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாஜகவுக்கு இது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது. இதனால் பாஜகவுக்கு இது மகிழ்ச்சியான செய்தியே.