பொகவந்தலாவையில் மாணவியொருவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டின்சின் தோட்டத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் முத்துமணி பிரியவர்ஸினி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி தூக்கில் தொங்குவதை அவரின் சகோதரி அவதானித்து அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் மாணவியின் கால்கள் கட்டப்பட்டிருந்தமையானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் சடலம் மரண விசாரணைகளுக்காக டிக்கோயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தாயின் சேலையில் குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த சம்பவமானது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.