மெக்ஸிகோ நாட்டில் இருக்கும் இருக்கும் நபர்கள் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழையும் செயலானது கடந்த சில வருடங்களாக அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு சட்ட விரோதமாக நுழையும் பலர் மேற்கொள்ளும் பல முயற்சிகளின் காரணமாக சில நேரங்களில் பெரும் விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
மெக்ஸிகோ நாட்டில் இருக்கும் கிலாபஸ் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றி கொண்ட லாரி ஒன்று புறப்பட்டு சென்றது இந்த லாரியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த லாரியானது அங்குள்ள சோயலா என்ற இடத்திற்கு உட்பட்ட பகுதியில் வரும் சமயத்தில் நிலை தடுமாறி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து சம்பவமானது நொடி பொழுதில் அரங்கேறியதை அடுத்து லாரியில் பயணம் செய்த 25 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும்., வாகனத்தில் பயணம் செய்த சுமார் 29 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரையும் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., படுகாயமடைந்த 25 பேரில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால்., மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சமும் உள்ளது.