திண்டுக்கல் நகரில் இருக்கும் கிருஷ்ணராவ் தெரு பகுதியை சார்ந்தவர் குமரேசன் (வயது 40). இவரது மனைவியின் பெயர் தேவி (வயது 36). அதே போன்று திண்டுக்கல்லில் இருக்கும் ராஜாக்கப்பட்டியை சார்ந்தவர் குமார்.
இவர் குமரேசனின் மனைவியான தேவிக்கு முத்தம் வழங்குவது போல இருந்த புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இந்த செய்தியானது முகநூல் வழியாக பரவி., கடைசியாக குமரேசனுக்கு கிடைத்துள்ளது.
இந்த விஷயத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குமரேசன்., அவரது மனைவி தேவி மற்றும் உறவினர் ரேணுகாதேவியுடன் (வயது 24) குமாரின் இல்லத்திற்கு சென்று அவரிடம் விஷயத்தை கூறி கண்டித்துள்ளனர்.
இந்த கண்டிப்பு சம்பவமானது கைகலப்பாக மாறவே., குமாரின் மனைவி கீதாவை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த கீதா அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு., வழக்குப்பதிவு செய்து குமரேசன் மற்றும் ரேணுகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.