கஜா புயலில் இறந்த தந்தையின் இறுதிச் சடங்கு செலவுக்காக கொத்தடிமையான சிறுவன்..!

கஜா புயல் கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் அருகே 120 கி.மீ வேகத்தில் புயல் தாக்கி கரையை கடந்தது.

கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. விவசாய ஆதாரங்கள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னமானது.

இதில் பலரும் வாழ்க்கையை தொலைத்து மீண்டு வரமுடியாமல் இன்னும் போராடி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சோக சம்பவம் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் அருகே மேலவன்னி ப்பட்டு கிராமத்தில் கொத்தடிமையாக சிறுவன் ஒருவன் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது.

இதையடுத்து கோட்டாட்சியர் சி.சுரேஷ் உத்தரவின் பேரில் தொழிலாளர் ஆய்வாளர் அன்பழகன், குழந்தைகள் பாதுகாப்பு துறை அன்பழகன், சைல்டு லைன் இயக்குநர் பி.பாத்திமாராஜ், சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் அகத்தியர் உள்ளிட்டோர் அங்குச் சென்று விசாரித்தனர்

.இதில், அச்சிறுவன் சூர்யா(10) என்பதும், கொத்தடிமையாக சுமார் 200 ஆடுகளை மேய்த்து வந்ததாகவும், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் என்பதும் தெரிந்தது. க

ஜா புயலின் போது நடராஜன் மரம் விழுந்து உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கிற்காக பொட்டலங்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.6,000 பெற்று, நடராஜனின் மகன் சூர்யாவை வேலைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அச்சிறுவன் மீட்கப்பட்டான்.