சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தது.
சினிமாவில் நடக்கும் விஷயங்களையும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றியும் தனது கருத்துகளை கூறி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும், இவர் சமூக பிரச்னைகளுக்கும், பெண்கள் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவரது கருத்தால் மிகவும் பிரபலமானது. அதேபோல் சமீபத்தில் ஓவியாவின் நடிப்பில் வெளியான 90ML படத்தை பற்றி எதுவும் கூறாமல் இருப்பதை பற்றி பேட்டி ஒன்றில் தற்போது இவர் பேசியுள்ளார்.
அதில், இது போன்ற திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதால், எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த படங்களுக்கு இலவச புரொமோஷன் கிடைத்துவிடுகிறது. அதன் காரணமாகவே 90ML திரைப்படத்திற்கு எதிர்ப்போ, ஆதரவோ தெரிவிக்கவில்லை.
நல்ல படங்களை ஆராதிக்க வேண்டும். இதுபோன்ற படங்களை பற்றி பேசாமல் இருந்துவிட்டால் போதும்.