அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

புதுக்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டியிட போகும் தொகுதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும். அதேபோன்று, 21 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் தவறாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு வேட்பாளர்களை பாதிக்கும். எனவே, இதுபோன்ற புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்துபிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ்யுடன் இணைவதற்கோ, கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவோ தயாராக இருந்தால் அதுகுறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்.

அதிமுக-வோடு கூட்டணி வைப்பது குறித்த தமாகா-வின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். அது சம்பந்தமாக அதிமுக தேர்தல்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. விரையில் எத்தனை தொகுதி என்று அறிவிப்போம் என்று ஜி.கே.வாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.