நெல்லையில் கணக்கெடுப்பு என்ற பெயரில் மர்ம நபர்கள் நடமாடுவதாக தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம் வீரமாணிக்கபுரம், அம்பை ரோடு தெற்குபகுதி, சீயோன் நகர், மாசிலாமணி நகர் பகுதியில்3 பேர் மர்மநபர்கள் சுற்றி வந்துள்ளனர்.
அவர்கள் வீடு, வீடாக சென்று நாய், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குறித்து கணக்கெடுக்க வந்திருப்பதாக கூறிஉள்ளனர். மேலும் தெருக்களில் நின்று வரைபடங்களையும் வரைந்துள்ளனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அவர்கள் வீரமாணிக்கபுரம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அதற்குள் அந்தநபர்கள் அங்கிருந்த சென்று விட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரோந்து பணியையும் அதிகரித்து உள்ளனர்.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், கணக்கெடுப்பு என்ற பெயரில் மர்ம நபர்கள் நடமாடுவதாக தகவல் வந்துள்ளது.
அவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு புதிய நபர்கள் வந்தால் உடனடியாக கதவை திறக்க கூடாது.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.