கால்நடை தீவனம் சேகரிக்க சென்ற சிறுமி.!! கரும்பு தோட்டத்திற்கு தூக்கி சென்று துடிக்க விட்ட மிருகங்கள்!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. தனியாக இருக்கும் பெண்கள்., முகநூலில் பழக்கம் வைக்கும் பெண்கள்., கடன் வாங்கிய பெண்., கூட்டு பாலியல் பலாத்காரம் என்று தொடர் சம்பவங்கள் பல சின்னத்தனமான காரணங்களுக்காகவும்., பாலியல் அரக்கன்களின் இச்சைகளுக்காகவும் பெண்களின் வாழ்க்கையானது சீரழிக்கப்பட்டும்., இதனால் பல பெண்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

உத்திரபிரேதேசம் மாநிலத்தில் இருக்கும் முசாபர்நகர் மாவட்டத்தில் இருக்கும் மன்சூர்பூர் பகுதியை சார்ந்த 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவரது இல்லத்தில் இருக்கும் கால்நடைகளுக்காக தீவனம் சேகரிப்பதற்கு வயல்வெளிக்கு செல்வது வழக்கம்.

அதன்படி., நேற்று கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக வயல்வெளிக்கு சென்ற சமயத்தில் அங்கு இருந்த 4 இளைஞர்கள் அங்கிருக்கும் கரும்பு தோட்டத்திற்குள் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு வைத்து சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி., அவரை மிரட்டி கூட்டு பாலியல் ரீதியிலான வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் அலறிய சிறுமியின் வலியையும் பொருட்படுத்தாது சிறுமியை அரக்கன்கள் போல சூறையாடியுள்ளனர்.

சிறுமியை கற்பழித்து விட்டு., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் பதறிய சிறுமி இல்லத்திற்கு விரைந்து தனக்கு நடந்த அவலத்தை கூறி கதறியளவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.