வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்: விரட்டி பிடித்த பொதுமக்கள்!

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் பாலமுருகன். இவர் தனது உறவினரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது, பட்டபகலில் இவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர் திருட்டில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் பொதுமக்களை பார்த்த அந்த மர்ம நபர் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அவரை விரட்டி பிடித்த பொதுமக்கள்  போலீசாரிடம் ஒப்பதடைத்தனர்.

மேலும் பாலமுருகன் வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 10 ஆயிரம் பணம் கொள்ளை போனதாக பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில், உத்தப்பநாயக்கணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்இ அப்போது திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் இளையான்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது பல ஊர்களில் பத்துக்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.