கொலம்பியாவில் 12 பேருடன் சென்ற விமானம் திடீரென வெடித்து சிதறியதில் உள்ளிருந்த அனைவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் லேசர் ஏரியோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான டி.சி.-3 வானூர்தி, இன்று காலை 10.40 மணிக்கு தெற்கு நகரான சான் ஜோஸ் டெல் குவியாரிலிருந்து மத்திய வில்லேவெனெனியோவிற்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இதில் துரதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 12 பேரும் பலியாகிவிட்டதாக உள்நாட்டு விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
டக்ளஸ் டிசி -3 விமானம் 1930 களில் முதலில் தயாரிக்கப்பட்ட ஒரு இரட்டை-என்ஜின் ப்ராபெல்லர் விமானம் ஆகும்.